ஆண்களே இந்த ராசியில் திருமணத்திற்கு பெண்கள் கிடைத்தால் நீங்கள் யோகக்காரர்கள்!

ஆண்களே இந்த ராசியில் திருமணத்திற்கு பெண்கள் கிடைத்தால் நீங்கள் யோகக்காரர்கள்!

திருமண பந்தம் என்பது ஆண்டவன் தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. நாம் என்ன தான் முண்டியடித்து குட்டிக்கரணம் போட்டாலும் நம் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ! அது தான் நடக்கும்.

ஆசை ஆசையாக திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகள் பலரும் முதலில் துவங்கிய அதே நாள் போல் கடைசி வரை இருப்பதில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து திருமணம் செய்தாலும், பல திருமணங்கள் தோல்வியில் முடிந்து போவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஒவ்வொரு ராசியில் பிறந்த பெண்களும், ஆண்களும் தனித்துவமான குணாதிசயங்களை கொண்டு இருப்பார்கள். அந்த வரிசையில் இந்த 4 ராசியில் பிறந்த பெண்கள் திருமணத்திற்கு வாரனாக அமைந்தால் ஆண்களுக்கு யோகம் தான். அப்படியான ராசிக்காரர்கள் யாரெல்லாம்? அவர்களின் குணாதிசயங்கள் என்ன? உங்களுடைய ராசி இவ்வரிசையில் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்:

 

 

நீங்கள் வரன் பார்க்க செல்லும் பொழுது பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்தி, அவர்கள் மேஷ ராசியில் பிறந்த பெண்களாக அமைந்து விட்டால் நீங்கள் யோகக்காரர் தான். மேஷ ராசியை சூரியன், சுக்கிரன், கேது போன்ற கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதனால் மேஷ ராசியில் பிறந்த பெண்கள் நியாயமான விஷயத்திற்கு அதிக கோபத்தை காட்டுவார்கள். அதே சமயத்தில் இவர்களுடைய அன்புக்கு ஈடு இணையே கிடையாது. இவர்கள் கோபப்பட்டாலும் அந்த இடத்தில் அக்கறை அதிகமாக இருக்கும். இவர்களைப் புரிந்து கொண்டு நடந்தால் அந்த வாழ்க்கை சொர்க்கமாக மாறும்.

மிதுனம்:

எந்த ராசியில் பிறந்த ஆண்களாக இருந்தாலும் உங்களுடைய ராசிக்கு மிதுன ராசிக்கார பெண்கள் கிடைத்தால், ஜாதக பொருத்தமும் சேர்ந்து அமைந்து விட்டால் நீங்களும் யோகக்காரர் தான். மிதுன ராசியில் பிறந்த பெண்கள் ராகு, செவ்வாய், குரு ஆகியோரின் ஆட்சிக்கு கீழ் இருப்பதால் இவர்களிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கும். ஒரே விஷயத்தில் இவர்களுடைய கவனம் எப்போதும் இருப்பதில்லை. எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து தெரிந்து வைத்திருப்பார்கள். அறிவில் சிறந்தவர்களாக விளங்கும் இவர்கள் உங்களுடைய வாழ்க்கை துணையாக கிடைத்தால் உங்களுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்து சேரும் என்பது மட்டும் உறுதி.

சிம்மம்:

ஜாதக பொருத்தம் சரியாக அமைந்து உங்களுக்கு சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் வாரனாக அமைந்தால், வேண்டாம் என்று தட்டிக் கழித்து விடாதீர்கள். பொதுவாகவே சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் தலைமைப் பண்பு கொண்டிருப்பார்கள். குடும்பப் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் ஜாலியாக இருக்கலாம். சுக்கிரன், சூரியன், கேது ஆகிய கிரகங்களின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் சிம்ம ராசி பெண்களிடம் நேர்மையும், தன்னம்பிக்கையும் அதிகம் நிறைந்திருக்கும். இவர்களுடைய நம்பிக்கைக்கு ஒருமுறை பாத்திரமாக மாறி விட்டால் போதும். கடைசி வரை அவர்களுக்கு உண்மையாகவும், அன்புடனும் நடந்து கொள்வார்கள்.

மீனம்:

மீன ராசியில் பிறந்த பெண்கள் சனி பகவான், குரு பகவான் மற்றும் புத பகவானின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பதால் இவர்கள் மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்களாக விளங்குவார்கள். மிகவும் சாந்தமான குணம் கொண்டவர்களாக இருக்கும் இவர்கள், உங்களுக்கு ஜாதகப் பொருத்தத்துடன் கொண்டு வரனாக அமைந்தால் விட்டு விடாதீர்கள். பொதுவாக ஆண்கள் விரும்பும் சாத்வீக குணம், மீன ராசி பெண்களுக்கு அதிகமாகவே இருக்கும். இவர்களை மனைவியாக பெற்றவர்கள் தவம் செய்பவர்கள் தான் என்றால் அது மிகையாகாது.