கொழும்பில் 3 பெண்கள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி பலி ! விபரங்கள் வெளியாகின

கொழும்பில் 3 பெண்கள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி பலி ! விபரங்கள் வெளியாகின

வத்தளை - திக்கோவிட்ட கடற்பரப்பில் நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் 14 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். 16, 20, 30 வயதுடைய பெண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை குறித்த கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றுமொரு பெண் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பதுளை, ஹாலி எல பகுதியை வசிப்பிடமாக கொண்ட சஞ்ஜிவ பிரியதர்சன (30 வயது) என்பவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் இவர் தொழிலுக்காக வத்தளை பகுதிக்கு வந்தவர் என தெரியவருகிறது.

அத்துடன், உஸ்வெட்டிகஸ்யாவ பகுதியை சேர்ந்த சவானி சுலக்சனா (வயது 19), உஸ்வெட்டிகஸ்யாவ பகுதியை சேர்ந்த தருசா பெர்னாண்டோ (வயது 16) மற்றும் கந்தானையில் வசிக்கும் சஜித் சந்தருவான் (வயது 14) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை ராகம போதனா வைத்தியசாலையின் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் (24 வயது) தருசாவின் சகோதரியெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திக்கொவிட்ட மயானத்திற்கு அருகில் உள்ள கடலில் நீராடுவதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த எழுவர் நேற்று பிற்பகல் சென்றுள்ளனர்.

அவர்களில் சிலர் நீராடிய போது கடலில் உருவாகிய சுழியில் அகப்பட்டு மூழ்குவதை கரையில் இருந்த உறவினர்கள் அவதானித்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் அறிந்த வத்தளை பொலிஸார் மற்றும் கடற்படை அதிகாரிகள் பொது மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.