த பினேன்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை
த பினேன்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு 6 இலட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை தொடர்பில் குறித்த தொகை வழங்கப்படும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
தற்போது நடைபெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார். இதன் ஊடாக நூற்றுக்கு 93 சதவீதமானவர்களின் பிரச்சினைகள் தீர்க்கபடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மீதமுள்ள வைப்பாளர்களின் இழப்பீட்டுத் தொகையும் விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.