கொரோனா அச்சம்: பாடசாலைகள் மூடப்படும்? வைத்திய அதிகாரி வெளியிட்ட தகவல்
கொரோனா தொற்று ஆபத்து காரணமாகப் பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளைத் தொடர்ந்தும் நடத்த அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க பெற்றோர், சுகாதாரப் பிரிவு மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகிய மூன்று தரப்பினரும் தங்களது பொறுப்புகளைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும்.
கொரோனா தொற்று ஆபத்து காரணமாகப் பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூட முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.