தேர்தல் தினத்தில் நேர நீடிப்பு தொடர்பாக விரைவில் முடிவு

தேர்தல் தினத்தில் நேர நீடிப்பு தொடர்பாக விரைவில் முடிவு

பொதுத்தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான முடிவு எதிர்வரும் 25ஆம் திகதி எடுக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அன்றைய தினம் நடைபெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகின்றமை காரணமாக நேர நீடிப்பு தேவை என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.