கல்முனையில் 14 பேருக்கு கொரோனா
கல்முனை பகுதியில் இன்று காலை 14 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கi 200 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகய்யா லதாகரன் தெரிவித்தார்.
அதேநேரம் மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறினார்.