இலங்கையில் அனைத்து பெற்றோர்களுக்கும் விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

இலங்கையில் அனைத்து பெற்றோர்களுக்கும் விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

கொவிட்-19 தொற்றாளர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தமது வீடுகளில் இருக்கும் பட்சத்தில், அந்த வீட்டிலுள்ள பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவுஅனைத்து பெற்றோர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் சுதத் சமரவீர இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கொவிட் தொற்று அதிகளவில் பரவி வருகின்ற பின்னணியில், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால், அந்த சவாலை வெற்றிக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மற்றும் மேல் மாகாணத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகள் கடந்த 23ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில், கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, சில பாடசாலைகள் இடைநடுவில் மூடப்பட்டன.

இதேவேளை ஹட்டனில் உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் பல மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.