இலங்கை விழா மண்டப உரிமையாளர்களின் கோரிக்கை

இலங்கை விழா மண்டப உரிமையாளர்களின் கோரிக்கை

விழா மண்டபங்களின் கொள்ளளவில் 50 சதவீத விருந்தினரை அனுமதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதிக்குமாறு அனைத்து இலங்கை விழா மண்டப உரிமையாளர்கள் மற்றும் உணவு விநியோகஸ்த்தர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

கொவிட் பரவல் காரணமாக விருந்தகங்கள் மற்றும் மண்டபங்களில் நிகழ்வுகளை நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பூ விற்பனையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் சமையற்காரர்கள் உட்பட 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் சுமார் ஒரு வருடமாக வருமானத்தை இழந்துள்ளனர்.

கடன் தவணை கொடுப்பனவுகளை திருப்பிச் செலுத்த ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தாலும், இப்போது அது காலாவதியாகியுள்ளது.

இதனால் விழாக்கள் சார்ந்த வர்த்தகத்துறையில் ஈடுப்படுள்ளவர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.