கண்டி வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா

கண்டி வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா

கண்டி தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இதுவரையில் இனங்காணப்படவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் நேற்றைய தினம் 675 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் ஊழியர்கள் இருவர் உட்பட 13 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.