தரம் 12 மாணவருக்கு கொரோனா - பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்கள்...!

தரம் 12 மாணவருக்கு கொரோனா - பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்கள்...!

மாணவர்களின் வருகை குறைவை அடுத்து ஹட்டன் - குயில்வத்த தமிழ் பாடசாலை இன்று மூடப்பட்டது.

அந்த பாடசாலையின் தரம் 12ல் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு கொவிட் தொற்றுறதியானதையடுத்து குறித்த பாடசாலையின் 19 மாணவர்கள், அந்த வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர் மற்றும் அதிபர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக குறித்த பாடசாலையின் நான்கு ஆசிரியர்களை தவிர மாணவர்கள் இன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.