கேகாலையில் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி...!
கேகாலை பொது மருத்துவமனையின் இரண்டாம் இலக்க சிகிச்சை அறையில் சேவையாற்றிய தாதி ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இந்தநிலையில் அவருடன் தொடர்புகளை பேணிய மருத்துவமனை பணிக்குழாமை சேர்ந்த 6 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் மருத்துவமனை செயற்பாடுகள் வழமைப்போன்று இடம்பெறுவதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் மிஹிரி ப்ரியங்கனி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கேகாலை - ருவன்வெல்லை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்று மூடப்பட்டுள்ளது
அந்த பாடசாலையில் தரம் 13ல் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் தாய்க்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி அடுத்த வாரம் பாடசாலை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என அந்த பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.