
காடழிப்பை தடுப்பதற்கு வான்படையினரின் ஒத்துழைப்பு அவசியம்
காடழிப்பை தடுப்பதற்கு வான்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படவிருப்பதாக, பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
காடழிப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவம் மற்றும் காவற்துறையினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்தநிலையில் காடழிப்பு இடம்பெறுகின்ற பகுதிகளை கண்காணிப்பதற்காக வான்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அதேநேரம் காடழிப்பு தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.