கொழும்பில் கரையொதுங்கிய டொல்பின்கள் - ஊரடங்கிலும் பார்க்க படையெடுக்கும் மக்கள்

கொழும்பில் கரையொதுங்கிய டொல்பின்கள் - ஊரடங்கிலும் பார்க்க படையெடுக்கும் மக்கள்

கொழும்பு - கல்கிசை கடற்கரையில் 25 டொல்பின் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த மீன்கள் இன்று கல்கிசை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன. இதனையடுத்து கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை மீட்டு கரையின் ஒதுக்குப் புறமாக சேர்த்துள்ளதுடன், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இதுபற்றிய தகவல்களை வழங்கியுள்ளனர்.

இறந்த நிலையில் ஒதுங்கிய டொல்பின்களைப் பார்ப்பதற்கு, ஊரடங்குச் சட்டம் என்றும் பாராமல் மக்கள் கடற்கரையில் ஒன்றுகூடியதால் - அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதோடு பெரும் பரபரப்பு நிலையும் ஏற்பட்டது.

இதேபோல டொல்பின்கள் கரையொதுங்கிய கல்கிசை கடற்கரைக்கு சற்று நெருக்கமாக உள்ள பாணந்துறை பிரதேச கடற்கரையில் கடந்த மாதம் நூற்றுக்கும் அதிகமான திமிங்கிலங்கள் உயிருடன் கரையொதுங்கிய சம்பவமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

PHOTOS: கல்கிசையில் 25 டால்பின் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுக்கம்!