கொரோனா தொற்றுக்குள்ளாகும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டின் பொலிஸ் துறையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 825 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே பொலிஸ் உத்தியோகத்தர்கள் 19 பேருக்கும், பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 17 பேருக்கும், நேற்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய விசேட அதிரடிப்படையினர் 225 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக புத்தளம் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 24 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.