
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மின்சார, நீர் வழங்கலில் தடங்கல் ஏற்படாது : அதிகாரிகள் உறுதி
மின்சாரக் கட்டணம் செலுத்துதல் தாமதமாக இருந்தாலும் மின்சாரம் இடைநிறுத்தப்படாது என இலங்கை மின்சார சபை இன்று(25) தெரிவித்துள்ளது.
கொவிட்-19 நிலைமை காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் அப்பகுதிகள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
இதேவேளை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை(NWSDB) நீர் பாவனைக் கட்டணம் செலுத்துதல் தாமதமானாலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படாது எனவும் குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் விநியோகம் இடைநிறுத்தப்படாது எனவும் அறிவித்துள்ளது.