கொரோனா அச்சத்தால் மூடப்பட்டது பொலிஸ் நிலையம்!

கொரோனா அச்சத்தால் மூடப்பட்டது பொலிஸ் நிலையம்!

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலாபம் மற்றும் ஆராச்சிக்கட்டுவ ஆகிய பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் இணங்காணப்பட்டுள்ளமையை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கொஸ்தாபல் ஒருவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும் சிலாபம் மெதவத்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவருடன் தொடர்பிலிருந்துள்ளதை அடுத்தே, அவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு சுயதனிமைப்படுத்தலில் இருந்த பொலிஸ் கொஸ்தாபல் ஒருவருக்கே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பொலிஸ் உத்தியோகத்தருடன் தொடர்பை பேணிய ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையம், நல்லதரண்கட்டுவ பொது மண்டபத்தில் இடம்பெறும் எனவும் சிலாபம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலம் மேலும் தெரிவித்துள்ளது.