கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது
நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்றைய தினம் மேலும் 485 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்துள்ளமைக்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கமைய 15,447 பேர் இதுவரையில் இந்த நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறி இருப்பதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது 5,426 பேர் கொவிட் 19 நோய்தொற்றுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்
நாட்டில் இதுவரையில் 20,967 பேர் கொவிட் 19 நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.