மொத்த பாதிப்பு 92 லட்சத்தை தாண்டியது, சிகிச்சை பெறுவோர் 4.44 லட்சம்... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 92 லட்சத்தை தாண்டிய நிலையில், 4.44 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சில மாநிலங்களில் 2வது அலையும், டெல்லியில் மூன்றாவது அலையும் பரவத் தொடங்கி உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

 

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 92,22,217ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 44,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 481 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,699 ஆக உயர்ந்துள்ளது. 

 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86,42,771 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 37,816 பேர் குணமடைந்துள்ளனர்.