முதன்மை பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை ஆரம்பிக்க திட்டம்
கொவிட் 19 அவதான நிலை காணப்படாத பிரதேசங்களில் முதன்மை பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
சுகாதார பிரிவு மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முதன்மை பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மிகவும் குறுகிய காலத்தினுள் முதன்மை பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் மற்றும் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை ஆரம்பிப்பதற்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு நற்செய்தியை தெரிவிக்க வேண்டும். முதன்மை பாடசாலைகள் தேசிய கொள்கையை இன்னும் 3 முதல் 4 வாரங்களுக்குள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்க நாங்கள் தயாராகி வருகிறோம், ”என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.