கொரோனாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் சுமார் 7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற விசேட Zoom தொழில்நுட்ப உதவியுடனான விசேட செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, கொழும்பு மாவட்ட செயலாளர், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டின் அனைத்து துறைகளும் படிப்படியாக செயற்பட ஆரம்பித்துள்ளன என்று தெரிவித்த அமைச்சர் சுகாதார பாதுகாப்பு தெடர்பான உறுதிமொழி கிடைக்கும் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது என்றும் இதன் போது சுட்டிக்காட்டினார்.