சவால்களுக்கு மத்தியிலேயே பாடசாலைகள் ஆரம்பம் : ஜி.எல்.பீரிஸ்!

சவால்களுக்கு மத்தியிலேயே பாடசாலைகள் ஆரம்பம் : ஜி.எல்.பீரிஸ்!

பல்வேறு சவால்களுக்கு மத்தியில், பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேகளை பெற்றுக்கொண்ட மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு, சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்த பாடசாலைகளுக்கு டிஜிட்டல் கற்பித்தல் தொழில்நுட்ப கட்டமைப்புகளையும் அமைச்சர் வழங்கிவைத்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினை முற்றாக இல்லாமல் செய்வதற்கு மேலும் இரண்டரை ஆண்டுகள் செல்லும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பெரும் அச்சமான சூழ்நிலையில் பெரும் சவாலுக்கு மத்தியில் பாடசாலைகள் திறக்கப்பட்டமையானது வெற்றியளித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.