
மாணவர்களின் போக்குவரத்திற்காக 600 பஸ்கள்
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பகுதிகளில், மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக சுமார் 600 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் மாணவர்கள் பயணிக்க வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
சில பகுதிகளில் பஸ் சேவைகள் குறைவாக உள்ளதால், சுகாதார வழிகாட்டல்களுக்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பஸ்களில் பயணிக்கின்றமை குறித்து இலங்கை போக்குவரத்து சபைக்கு தெரியவந்துள்ளது்
இதனால், அவ்வாறான பகுதிகளில் மேலதிகமாக ஓரிரு பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கூறியுள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் வழமை போன்று சேவையில் ஈடுபடுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.