இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான செலவீனம் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான செலவீனம் அதிகரிப்பு

நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் உள்ள போதிலும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான செலவீனம் இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 2019 ஆம் ஆண்டை விட இந்த வருடத்தில் 12.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் பால்மா இறக்குமதிக்காக 253 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக மத்தியவங்கி தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் பால்மாவிற்கான விலை குறைவாக இருந்த போதிலும் அதற்கான தேவை கணிசமான அளவு அதிகரித்ததாக குறிப்பிடப்படுகிறது.