தனிமைப்படுத்தப்பட்ட அம்பலாங்கொடை பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை

தனிமைப்படுத்தப்பட்ட அம்பலாங்கொடை பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை

நேற்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்ட அம்பலாங்கொட பகுதியிலுள்ள இரண்டு பாடசாலைகளிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அவர்களுக்கு இன்றைய தினம் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் வெனுரகே சிங்க ஆராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலைகளில் பயிலும் அம்பலாங்கொடை - நிலகபுர பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமையினால் இன்று பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, வேயங்கொட - பத்தரகெதர - ஆசிரியர் கலாசாலைக்கு அருகில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மெனிங் சந்தையின் நாட்டாமிமார்கள் மற்றும் யாசகர்கள் 20 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அங்கு 112 நாட்டாமிமார்களும், கொழும்பைச் சேர்ந்த 8 யாசகர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர். பரிசோதனையில் 20 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.