கொரோனா எதிரொலி- தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரபல பாடசாலை மாணவர்கள்

கொரோனா எதிரொலி- தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரபல பாடசாலை மாணவர்கள்

அம்பலாங்கொடை பகுதியில் உள்ள பிரபல பாடசாலைகள் இரண்டிலுள்ள 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலைகளில் கல்வி பயிலும் அம்பலாங்கொடை-திலகபுர பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயும் தந்தையும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த குடும்பத்தில் உள்ள இரண்டு மாணவர்கள் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.

இதன் காரணமாகவே அவர்களுடன் நெருங்கி பழகிய மாணவர்களும் ஆசிரியர்களும் தற்போது தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.