தனிமைப்படுத்தப்பட்ட மற்றுமொரு குடியிருப்பு பகுதி

தனிமைப்படுத்தப்பட்ட மற்றுமொரு குடியிருப்பு பகுதி

வத்தளை-தொழிலாளர் குடியிருப்பு தொகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 35 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து வத்தளை-பள்ளிய வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டுக் குடியிருப்பு தொகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், எஹலியகொட பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையொன்றில் பணியாற்றிவரும் 7 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து குறித்த தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 717ஆக அதிகரித்துள்ளது.