வங்காள விரிகுடாவில் பலத்த சூறாவளி - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் பலத்த சூறாவளி - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் காங்கேசன்துறை கரையின் கிழக்கில் சுமார் 290 கிலோ மீற்றர் தொலைவில் நிவர் சூறாவளி நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மேலும் தீவிரமடைந்து, பலத்த சூறாவளியாக மாற்றமடையக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடமேற்கு திசையை நோக்கி நகர்வதுடன் தமிழக கரையை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் ஆழமான மற்றும் ஆழமற்ற பகுதிகளில் திடீரென மணித்தியாலத்திற்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக வானிலை தொடர்பான தகவல்களை வளிமண்டலவியல் திணைக்களம் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தருகிறார்.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக பருத்தித்துறை மற்றும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டப 17 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என் சூரியராஜ் இதனை தெரிவித்துள்ளார்.