12 மணித்தியாலங்களில் தாழமுக்கம் சூறாவளியாக விருத்தியடையும்! வடக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை
வங்களா விரிகுடா கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள மிக வலுவான தாழமுக்கமானது திருகோணமலை கரையில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 280 கிலோமீற்றர் தொலைவில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தாழமுக்கம், இலங்கையின் வட கிழக்கு கரையோர பிரதேசத்திற்கு அண்மையாக தமிழகத்தின் கரையோர பிரதேசத்தை நோக்கி நகர்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் இன்றைய தினம் பதிவாகும் மழை வீழ்ச்சி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.