89 இலட்சத்தினை கடந்த கொரோனா தொற்றாளர்கள்..

89 இலட்சத்தினை கடந்த கொரோனா தொற்றாளர்கள்..

 சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 89 இலட்சத்து 6 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது.
 
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 66 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது.
 
இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47 இலட்சத்து 32 ஆயிரத்து 888 ஆக அதிகரித்துள்ளது.

வர்த்தக வாணிப செய்தி

இலங்கையில் கோழி இறைச்சி உற்பத்தி எதிர்வரும் வாரங்களில் வீழ்ச்சியடையும் என உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொவிட்-19 காரணமாக கோழிகளை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் சோள உற்பத்தி குறைவடைந்துள்ளமையினால் கோழிகளுக்கான உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.