மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் மீண்டும் திறப்பு
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் பொது மக்களுக்காக இன்று மீண்டும் திறக்கப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
வரையறுக்கப்பட்ட பணியாளர்களுடன் வரையறுக்கப்பட்ட அளவிலான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
கிழமை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு சேவையைப் பெறுவதற்கான திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளுமாறு பொது மக்களை, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.