இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் எந்த நாட்டுக்கு முன்னுரிமை? இராணுவத் தளபதி விளக்கம்
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வருவோரின் பட்டியலில் மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
அந்த வகையில், குவைத்திலிருந்து நேற்று 326 பேர் இலங்கைக்கு வந்தனர். இன்று, 188 பேர் கட்டார், டோஹாவிலிருந்து வருவார்கள்.
அடுத்த வாரம் இலங்கைக்கு வருவோர் குறித்து அந்தந்த தூதரகங்களுக்கு வெளியுறவு அமைச்சகம் மூலம் தெரிவித்துள்ளோம்.
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். அந்த நாடுகளில் உள்ள எங்கள் மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளனர்.
30 ஆம் திகதி சவுதி அரேபியாவிற்கும் ஒரு விமானத்தை அனுப்புவோம். நாங்கள் மத்திய கிழக்கில் அதிக கவனம் செலுத்துவோம், மற்ற நாடுகளுடன் முடிந்தவரை பணியாற்றுவோம். என்றார்