வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்..!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்..!

வங்களா விரிகுடாவின் தென்மேற்காக காணப்படுகின்ற மிக வலுவான தாழமுக்கமானது திருகோணமலை கரையில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 280 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இது எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து, சூறாவளியாக விருத்தியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பின்னரான 12 மணித்தியாலங்களில் அந்த சூறாவளியானது மேலும் தீவிரமடைந்து மிகப்பலத்த சூறாவளியாக மாற்றமடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியான அடுத்த 48 மணித்தியாலங்களில் வட மேற்கு திசையின் ஊடாக தமிழகத்தின் கரையை ஊடரத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது,

இதன் காரணமாக இலங்கை நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் இடைஇடையே மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரையில் பலத்த காற்று வீசக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.