போலியாக அச்சிடப்பட்ட அமெரிக்க டொலர்களுடன் இரண்டு பேர் கைது
போலியாக அச்சிடப்பட்ட அமெரிக்க டொலர்களுடன் நேற்றையதினம் இரண்டு பேர் கந்தளாயில் கைது செய்யப்பட்டனர்.
காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்களிடம் இருந்து ஒவ்வொன்றும் 100 டொலர்கள் பெறுமதி இடப்பட்ட 372 நாணயத்தாள்கள் மீட்கப்பட்டன.
அவர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.