கொவிட் 19 பாதுகாப்பு நிதியம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு தீர்மானம்.!
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்காக கொவிட் 19 பாதுகாப்பு நிதியம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு அந்த சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி, அரச போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்துகளில் பயணிக்கும் சகல பயணிகளிடமும் அறவிடப்படும் பேருந்து கட்டணங்களில் ஒரு ரூபாவினை கொவிட் 19 பாதுகாப்பு நிதிக்காக ஒதுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்
எவரேனும் ஒருவர் அரச போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்றில் பயணித்ததன் பின்னர் கொவிட் 19 தொற்றுறுதியானால் ஒதுக்கிடப்படும் இந்த தொகையினை பாதிக்கப்படுவர்களுக்கான இழப்பீடாக வழங்கவும் தீர்மானித்துள்ளதாக கிங்ஸி ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.