கொரோனா வைரஸ் பரவல் பல நாடுகளில் அதிகரிக்கும் - WHO

கொரோனா வைரஸ் பரவல் பல நாடுகளில் அதிகரிக்கும் - WHO

கொரோனா தொற்றுநோயின் புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:-

அமெரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.

நாம் தற்போது புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். கொரோனா இப்போதும் அதிவேகமாகவே பரவிக் கொண்டிருக்கிறது.ஆகையால் முக கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது, கை கழுவுதல் ஆகியவை தற்போதும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக உலக நாடுகள் அனைத்தும் மிக மிக கவனமானவும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது கடினமான பயணமாக இருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.