பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் மூன்றாவது தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
பல பிரதேசங்களில் மாணவர்களின் வருகை குறைந்தளவில் காணப்பட்டதாக தெரிவிக்கபடுகின்றது
இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த பதிவுகளை இணையம் (Online) ஊடாக மாத்திரமே மேற்கொள்ள முடியுமெனவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2019-2020 புதிய கல்வியாண்டிற்காக 41,500 மாணவர்கள் வரையில் உள்வாங்குவதற்கு எதிர்பாரப்பதாக தெரிவிக்கப்படுகிறது
பதிவுகளுக்காக பிரவேசியுங்கள் www.ugc.ac.lk