அலரிமாளிகை மூடப்பட்டதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது- பிரதமர் அலுவலகம்

அலரிமாளிகை மூடப்பட்டதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது- பிரதமர் அலுவலகம்

பிரதமர் அலுவலகத்திலோ அல்லது அலரி மாளிகையிலோ எந்தவொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அலரி மாளிகை மூடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி, அலரி மாளிகையின் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையின் கடமைகளுக்காக அத்தியாவசிய அதிகாரிகளை மாத்திரமே அழைத்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.