லண்டனில் இருந்து 60 பேர் நாடு திரும்பியுள்ளனர்

லண்டனில் இருந்து 60 பேர் நாடு திரும்பியுள்ளனர்

இலங்கை திரும்ப முடியாமல் இங்கிலாந்தில் தங்கியிருந்த 60 இலங்கையர்கள் இன்று காலை ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் ஹித்ரோ விமான நிலையத்தில் இருந்து இவர்கள் இன்று காலை 8.22 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இவர்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.