கலிபோனியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு சட்டம்

கலிபோனியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு சட்டம்

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக கலிபோனியாவில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

குறித்த மாநிலத்தின் அண்மைக்கால புள்ளிவிபரங்கள் கடந்த ஆகஸ்ட் மாத கொவிட் 19 பரவலைவிட அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில் கொவிட் 19 பரவலை தடுக்கும் முயற்சியாக கலிபோனியாவில் இரவு நேர ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அந்த மாநிலத்தின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 790 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அமெரிக்காவில் நாள் ஒன்றில் பதிவான அதிகளவான கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை இதுவென தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் கொவிட் 19 தொற்றின் நாளாந்த இறப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அமெரிக்காவில் ஆயிரத்து 460 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகளவானோர் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர்.

இதற்கமைய உலகலாவிய ரீதியில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.