விளக்கமறியலில் உள்ள 6,334 பேரின் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த நடவடிக்கை

விளக்கமறியலில் உள்ள 6,334 பேரின் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த நடவடிக்கை

5 கிலோகிராமுக்கு குறைவான கஞ்சா மற்றும் 2 கிராமுக்கு குறைவான ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுமார் 6,334 பேரின் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று விடயத்திற்கு பொறுப்பான சிறைச்சாலைகள் புனரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே, நாளை (23) நீதியமைச்சர் அலி சப்ரியை சந்திக்கவுள்ளார்.

சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் நிலைக்கு இதுவும் ஒரு காரணம் என சிறைச்சாலைகள் புனரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.