கொரோனா தொற்றினால் இலங்கையில்ஒன்பது பேர் பலி! விபரங்கள் வெளியாகின

கொரோனா தொற்றினால் இலங்கையில்ஒன்பது பேர் பலி! விபரங்கள் வெளியாகின

கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக  ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொவிட்-19 நோய்த் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 83 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகின.

கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட்டினால் ஏற்பட்ட நியூமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.

தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட்டினால் ஏற்பட்ட நியூமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

 

கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பெண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் இவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

கொவிட் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் இவர் உயிரிழந்துள்ளார். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான பெண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் இவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொவிட் தொற்று என கண்டறியப்பட்டு முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

நியூமோனியா, பக்ரீயா தொற்று மற்றும் நோய்த் தொற்று குறித்த அதிர்ச்சியினால் இவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொவிட் தொற்று என கண்டறியப்பட்டு ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

நியூமோனியா, மற்றும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

76 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொவிட் தொற்று என கண்டறியப்பட்டு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். நியூமோனியா மற்றும் இரத்தம் விசமானதில் இவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.