நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்..!

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்..!

நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 நோயர்கள் அனைவரும், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கொழும்பில் 305 பேரும், கம்பஹாவில் 58 பேரும் நேற்று கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன் ஐந்து காவற்துறையினரும், 1 விசேட அதிரடிப்படைவீரரும் கொவிட் 19 தொற்றுறுடன் நேற்று அடையாளம் காணப்பட்டதுடன், வெலிக்கடை மற்றும் போகம்பறை சிறைச்சாலைகளில் தலா ஒவ்வொருவருக்கு நோய்த்தொற்று செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் 2 பேருக்கும் நேற்று கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.