
இலங்கையில் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
இலங்கையில் இதுவரையில் 28 ஆயிரத்து 472 குடும்பங்களைச் சேர்ந்த 77 ஆயிரத்து 531 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சுகாதாரத் துறையுடன் இணைந்து குறித்த வீடுகளைத் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளையும் கண்காணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், சிவில் உடைகளில் பொலிஸ் அதிகாரிகளால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.