75வது பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

75வது பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

நாட்டின் 75வது பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றில் ஆரம்பமாகிறது.

நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.

இதேவேளை, முன்மொழியப்பட்டுள்ள பாதீட்டின் படி, 2021 ஆம் ஆண்டுக்காக மதிப்பீடு செய்யப்பட்ட அரசாங்கத்தின் வருமானம் ஆயிரத்து 961 பில்லியன் ரூபாவாகும்.

அரசாங்கத்தின் மொத்தச் செலவு 3 ஆயிரத்து 525 பில்லியன் ரூபா.

வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான துண்டுவிழும் தொகை 1 ஆயிரத்து 564 பில்லியன் ரூபாவாகும்.