பீ சி ஆர் பெறுபேறு கிடைப்பதற்கு முன்னர் வீட்டிற்கு சென்ற இளைஞர்..!

பீ சி ஆர் பெறுபேறு கிடைப்பதற்கு முன்னர் வீட்டிற்கு சென்ற இளைஞர்..!

களினியில் சீனித்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் தமக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுவதற்கு முன்னர், நோர்ட்டன்ப்ரிஜ் ஒஸ்போன் பகுதியில் மிடிபோட்டில் உள்ள தமது வீட்டுக்கு சென்றுள்ளார்.

எனினும் இன்று அவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து அவரது தாயும் தந்தையும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரை ஹம்பாந்தொட்டைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பினைப் பேணிய 7 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.