
நுகேகொடையில் விபத்து - இருவர் பலி..!
ஹைய் லெவல் வீதியில் நுகேகொடை - மிரிஹான விஜேராம சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விஜேராம சந்தியில் இருந்து மஹரகம நோக்கி பயணித்த உந்துருளி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தில் மத்துகம பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும் வெலிமடை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதியுமே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.