
கண்டி போகம்பறை சிறைச்சாலையில் 41 கைதிகளுக்கு கொரோனா தொற்று!
கண்டி போகம்பறை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
போகம்பறை சிறைச்சாலையில் நேற்று திடீரென 217 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளிலேயே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் போகம்பறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இதுவரை 446 கைதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் தெரிவி்க்கின்றது.
கொரோனா தொற்றுக்குளானவர்கள் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.