பாதீட்டின் மூலம் எதிர்பார்க்கப்படும் விடயத்தை அறிவித்த அஜித் நிவாட் கப்ரால்..!

பாதீட்டின் மூலம் எதிர்பார்க்கப்படும் விடயத்தை அறிவித்த அஜித் நிவாட் கப்ரால்..!

கிராமிய பொருளாதாரம் மற்றும் கிராமிய கைத்தொழில் துறையை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு இந்த முறை சமர்ப்பிக்கப்படவுள்ள பாதீட்டின் மூலம் எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நீண்ட காலம் நீடித்து இருக்கக்கூடிய நிவாரணங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியின் சௌபாக்கிய தொலை நோக்கை பூர்த்தி செய்வதற்கு இந்த பாதீடு ஏதுவாக அமையும் எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார்.