புதிய அரசியலமைப்பிற்காக முன்வைக்கப்பட்ட மாற்று முன்மொழிவுகள்..!

புதிய அரசியலமைப்பிற்காக முன்வைக்கப்பட்ட மாற்று முன்மொழிவுகள்..!

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பிற்காக முன்வைக்கப்பட்ட மாற்று முன்மொழிவுகள் உள்ளடங்கிய நூல், பௌத்த மகா சம்மேளனத்தினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

பௌத்த சாசன செயலணி மற்றும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி, மஹா சங்கத்தினரால் விஜேராம மாவத்தையிவல் உள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து, பௌத்த மகா சம்மேளனத்தின் தலைவர் ஜகத் சுமதிபாலவினால் இந்த நூல் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது

.அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின் தேசிய கொள்கை திட்டமிடல் குழு சட்டம் அரச நிர்வாகம் தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச கொள்கை துணைக் குழுவினால் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

வஜிராராமாவாசி ஞானசீஹ தேரர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகளான மனோஹர டி சில்வா, பாலித பெர்னாண்டோ, பிரசன்ன லால் டி அல்விஸ், வைத்யரத்ன மற்றும் கலாநிதி பாலித கோஹொன, பேராசிரியர் லலிதசிறி குணருவண், ரஞ்சித் தென்னகோன், கலாநிதி நிமல் ஹெட்டிஆராச்சி, ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திர நிமல் வாகிஷ்ட ஆகியோரை இத்துணைக் குழு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.