
ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியாவிலுள்ள இருவரே போலிச் செய்திகளை பதிவேற்றியுள்ளனர்...!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கையர்கள் வீதிகளில் உயிரிழக்கின்றனர் என்ற போலியான செய்திகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலுள்ள இருவரே பதிவேற்றம் செய்துள்ளனர் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.